
meallinamae mellinamae song full lyrics | whatsapp status videos
மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்
மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்!
நான் தூரத் தெரியும் வானம்
நீ துப்பட்டாவில் இழுத்தாய்!
என் இருபத்தைந்து வயதை
ஒரு நொடிக்குள் அடைத்தாய்!
ஹோ ஹோ ஹே ஹே
மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்
வீசிப்போன புயலில்
என் வேர்கள் சாய வில்லை
ஒரு பட்டாம் பூச்சி மோத
அது பட்டென்று சாய்ந்ததடி!
எந்தன் காதல் சொல்ல
என் இதயம் கையில் வைத்தேன்!
நீ தாண்டிப்போன போது
அது தரையில் விழுந்ததடி!
மண்ணிலே செம்மண்ணிலே என் இதயம் துள்ளுதடி
ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயர் சொல்லுதடி
கனவுப் பூவே வருக! உன் கையால் இதயம் தொடுக!
எந்தன் இதயம் கொண்டு
நீ உந்தன் இதயம் தருக!
ஹோ ஹோ ஹே ஹே
மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்!
மண்ணைச்சேரும் முன்னே அடி மழைக்கு லட்சியம் இல்லை
மண்னைச் சேர்ந்த பின்னே அதன் சேவை தொடங்குமடி…
உன்னைக் காணும் முன்னே என் உலகம் தொடங்கவில்லை
உன்னைக் கண்ட பின்னே என் உலகம் இயங்குதடி…
வானத்தில் ஏறியே மின்னல் பிடிக்கிறவன்,
பூக்களை பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன்!
பகவான் பேசுவதில்லை!
அட பக்தியும் குறைவதும் இல்லை
காதலி பேசவுமில்லை
என் காதல் குறைவதும் இல்லை!
ஹோ ஹோ ஹே ஹே
மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்
நான் தூரத் தெரியும் வானம்
நீ துப்பட்டாவில் இழுத்தாய்
என் இருபத்தைந்து வயதை
ஒரு நொடிக்குள் அடைத்தாய்
ஹோ ஹோ ஹே ஹே